அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் களமிறக்கப்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கண்டி – அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சி வெற்றிபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெற்றமை போல அது நடைபெறும் என்றும் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக மகிந்த அணிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் கோத்தபாய ராஜபக்ஸதான் ஜனாதிபதி வேட்பாளர் என எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.