தமிழகத்தி பாறைக்கு அடியில் சிக்கி உயிரை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்த நபர் 11 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி பகுதியில் பாதி மண்ணுக்குள் புதைந்து இருந்த பாறையை உடைப்பதற்கு ஏதுவாக மண்ணை அகற்றும் பணி நேற்று காலையில் நடைபெற்றது.
ஜே.சி.பி மூலம் மண் அகற்றப்பட்டபோது திடீரென பாறை உருண்டு ஜே.சி.பி மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜே.சி.பி. ஆப்பரேட்டர் பிஜூமோன் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
சுமார் 2,000 டன் எடை கொண்ட பாறைக்கு அடியில் சிக்கிய அவரை மீட்க காலை 10 மணி முதல் தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் முயற்சித்தனர்.
அவரை நேற்று இரவு 10 மணியளவில்தான் உயிரோடு மீட்க முடிந்தது. அவரின் கால்கள் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர் ஆசாரிப்பள்ளமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.