பேரிச்சம் பழத்தை ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதனால் டைப்-2 சர்க்கரை நோய் வரும் அபாயத்தை உண்டாக்கும்.
இதுப்போன்று ஏராளமான எதிர்பாராத பக்கவிளைவுகளை பேரிச்சம் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் சந்திக்க நேரிடும்.
இக்கட்டுரையில் ஒருவர் பேரிச்சம் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து தெரிந்து, இனிமேல் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடாமல் அளவாக சாப்பிடுங்கள்.
இரத்த சர்க்கரை அளவு
பேரிச்சம் பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இது கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
பேரிச்சம் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 103 உள்ளது. சாதாரணமாக பேரிச்சம் பழத்தை ஒன்று சாப்பிடும் போதே, சட்டென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
அதிலும் ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக பேரிச்சம் பழத்தை சாப்பிடும் போது, அது டைப்-2 சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.
உடல் பருமன்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
ஆனால் பேரிச்சம் பழம் மட்டும் ஏன் உடல் எடையைக் குறைக்க உதவுவதில்லை என்பதற்கு சரியான காரணம் ஒன்று உள்ளது.
என்ன தான் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருந்தாலும், கலோரிகள் அதிகம் இருந்தால், அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.
1 கிராம் பேரிச்சம் பழத்தில் 2.8 கலோரிகள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், தங்களது டயட்டில் பேரிச்சம் பழத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.
வயிற்று வலி
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகள் இதய பிரச்சனை மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டிருக்கும்.
நார்ச்சத்து என்பது தாவர வகை கார்போஹைட்ரேட், அவை உடலில் செரிமானமாகாது. மாறாக குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
ஆனால் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து, குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, வயிற்று வலியை உண்டாக்கும். உயிரிழப்பை ஏற்படுத்தும் ஒரு உணவு பொருளாகவும் இது காணப்படுகின்றது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எதுவும் ஆபத்துதான்.
வயிற்றுப் போக்கு
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த பேரிச்சம் பழத்தை ஒருவர் ஒரே வேளையில் அதிகளவு சாப்பிட்டால், அதனால் கடுமையான வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்பட வேண்டிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அளவாக சாப்பிட்டு நன்மையைப் பெறுங்கள்
அதிகம் வேண்டாம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு 300-500 கலோரிகள் எடுப்பதே நல்லது. அளவுக்கு அதிகமாக கலோரிகளை எடுத்தால், அதனால் கர்ப்ப காலத்தில் உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிடும்.
எனவே அளவாக 1-2 சாப்பிட்டு கர்ப்ப காலத்தை சிறப்பானதாக வைத்துக் கொள்ளுங்கள்.