பணம் தராததால் தலையை தனியாக வெட்டிக் கொலை..!

சிவகங்கையில் முத்துப்பாண்டி என்பவரை பூமிநாதன்  என்பவர் தலையை  அறுத்து தனியாக தூக்கி கொண்டு போய் காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து அதில் இருந்து கிடைக்கும்  நுங்குகளை முத்துப்பாண்டி என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்திருக்கிறார். கடந்த ஒரு ஒருவார காலமாக  நுங்கு விற்பனை செய்த  பணத்தை பூமிநாதனிடம் ஒப்படைக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த  பூமிநாதன், முத்துப்பாண்டியைத் தேடி அலைந்தார். அப்போது அவர் கதிரேசன் பாரில் இருப்பது தகவல் கிடைத்ததும் அங்கே நேராக சென்றார் பூமிநாதன். குடிபோதையில் இருந்த முத்துப்பாண்டியிடம் பணத்தை கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார் பூமிநாதன். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதும் கோபத்தின் உச்சிக்கு போன பூமி தான் மறைத்து கூடையில் வைத்திருந்த நுங்கு சீவும் அருவாளினால் முத்துப்பாண்டி தலையை சீவி தனியாக கையில் எடுத்துக் கொண்டு அதே வீதியில் உள்ள தபால்நிலையம் வரைக்கும் முத்துப்பாண்டி தலையை தூக்கிக்கொண்டு போனதும் எதிரே அந்த வழியாக வந்தவர் டி.எஸ்.பிக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு பூமிநாதனை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தாததால் பணம் கொடுத்தவர்கள் அவரை காரில் கடத்தி கள்ளந்திரி அருகே வைத்து கழுத்தறுத்த சம்பவம் நடைபெற்றது.