5 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாய் என சுங்க ஊடக பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்தார்.
இன்று காலை தாய்லாந்து நோக்கி குறித்த பெண் செல்ல முற்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
32 வயதுடைய குறித்த பெண் இத்தாலி நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் பயணப்பொதியை சோதனையிட்ட போது குறித்த ஹஷீஸ் போதைப்பொருள் தொகை இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.