சரவணன் மீனாட்சியை அசிங்கப்படுத்திய பிரபல தொலைக்காட்சி! சோகத்தில் நடிகை எடுத்த முடிவு?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சரவணன் மீனாட்சி என்ற தொடர் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது.

இந்த வெற்றியை சரவணன் மீனாட்சி குழு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவியின் விருது வழங்கும் விழா அன்மையில் இடம்பெற்றது.

குறித்த விழாவில் சரவணன் மீனாட்சியில் நடித்த சின்னத்திரை நடிகை ரச்சிதாவிற்கு “சிறப்பு டெடிகேஷன் விருது ” வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட ரச்சிதா “நான் ஏற்கனவே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சரவணன் மீனாச்சியில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற விருதினை பெற்றுள்ளேன்.

அனால், தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த விருது நான் இரண்டு ஆண்டுகளாக நடித்தது போதும் என்று எண்ணி எனக்கு அளித்துள்ளார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
மேலும் இந்த சீரியலில் இருந்து என்னை விலக கோரியே இந்த விருதை தமக்கு வழக்கப்பட்டதாக நான் கருதுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சரவணன் மீனாட்சியில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இது கவலையாக இருந்தாலும் விஜய் டிவி யே என்னை கழுத்தை பிடித்து தள்ளும் வரை நான் அந்த சீரியலில் இருந்து விலக மாட்டேன் என்றும் ரச்சிதா கூறியுள்ளார்.