வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவின் சாரநாத்திலிருந்து புனித பௌத்த சின்னங்கள் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இதற்கான நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உட்பட தேரர்கள் சிலரும் பங்கேற்றனர்.
இந்தியாவிலிருந்து இந்த புனித சின்னங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை என்பதுடன் இதற்காக இந்திய அரசாங்கத்தால் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுமக்கள் இந்த புனித சின்னங்களுக்கான தங்களது வணக்கங்களை ஏப்ரல் 28 ஆம் திகதியிலிருந்து மே 2 ஆம் திகதி வரை கொழும்பு அலரிமாளிகையில் செலுத்துவதற்கு முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.