மா இலையை நீரில் போட்டு குடியுங்கள்: இந்த நோய்க்கு மருந்து!

மாம்பழங்களை பற்றியும், அதன் மருத்துவ பயன்கள் பற்றியும் நமக்கு தெரிந்ததை விட மாவிலையை பற்றி அதிகளவில் தெரியாது.

மாவிலையில் ஏராளமான மருத்துவ குணநலன்கள் உள்ளன. உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மாவிலை தரும் தீர்வுகள் குறித்து இங்கு காண்போம்.

மாவிலையில் விட்டமின்கள் A,B,C,E ஆகியவை இருக்கின்றன. அத்துடன் எதில் அசிடேட், அல்கலாய்டு, டேனின், கில்கோசிட், மேக்னஃப்ரின், ஃபேலவனாய்டு, பீட்டாகரோட்டி, டயட்டரி ஃபைபர், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.

மாவிலையில் உள்ள மேனின் மற்றும் ஆந்தோசைனின் ஆகியவை, சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்திலே தடுத்து நிறுத்தும். மேலும், சர்க்கரை நோயினால் கண்களில் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும் இது உதவும். அத்துடன் இன்சுலினின் சுரப்பை மாவிலையில் உள்ள டாராஎக்ஸ்ரோல் சீர்படுத்தும்.

மாவிலை நீர்

மாவிலைகளை முதல் நாள் இரவு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதனை துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் நன்றாக கொதித்த பின்னர், அந்த தண்ணீரை இரவு முழுவதும் ஊர வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் மாவிலைகளை எடுத்து விட்டு, தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதன்மூலம் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

இதே போல, வாதப் பிரச்சனையை தவிர்க்க, குருத்தாக இருக்கக்கூடிய இளம் மாவிலைகளை சுத்தம் செய்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரை இறக்கியவுடன் இரண்டு மணி நேரம் கழித்து, அதனை வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பற்களின் ஆரோக்கியத்திற்கும், ஈறுகளின் உறுதித்தன்மைக்கும் மாவிலை உதவும். இதற்காக மாவிலை நீரைக் கொண்டு வாய்கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம், வாயில் அதிக எச்சில் சுரப்பு கட்டுப்படுத்தப்பட்டு, தொற்று அல்லது கிருமிகள் இருந்தால் நீங்கும்.

குழந்தை பேறுக்காக சின்ன வெங்காய சாறு மூன்று தேக்கரண்டி, ஒரு கைப்பிடியளவு மாவிலைகள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். நீரின் அளவு பாதியாகும் வரை கொதிக்க வைத்து பின்னர் இறக்கி, அதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் மாவிலை குடித்து வர ரத்த நாளங்கள் சுத்தம் செய்யப்பட்டு, ரத்த ஓட்டமும் சுத்தம் செய்யப்படும். மேலும், மாவிலை நீர் குடித்து வந்தால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்.

சிறுநீரக கற்கள்

சிறுநிரகத்தில் கற்கள் உண்டாகும் பிரச்சனையை சரி செய்ய, மாவிலை பொடியை பயன்படுத்தலாம். இதற்காக மாவிலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து, பின்னர் அதனை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்துமா

மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். அத்துடன் தொண்டை அடைப்பு ஏற்பட்டிருந்தால் கூட இதனை முயற்சி செய்யலாம். இந்த நீரை சூடாக அருந்த வேண்டும்.

மாவிலையில் அதிக அளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் உள்ளதால், இவற்றில் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது.

வெயிலினால் சருமத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள், பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிற வயிற்றுப் போக்கு ஆகியவற்றையும் தீர்க்க மாவிலை நீர் உதவுகிறது.

மாவிலை நீரில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக இதனை பயன்படுத்தினால் செரிமானக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.