மகள் வயது பெண் மீது காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறந்த நடிகர்

பாலிவுட்உலகில் இப்போதைய ஹாட் டாபிக் 52 வயதான நடிகர் சோமன், மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதுதான்.

உலகிற்குஇவர்களது வயது வித்தியாசம் பெரிதாக தெரிந்தாலும்,இவர்கள் இருவருக்குள்ளும் இருப்பது புனிதமான காதல். அந்த காதல் இவர்களது வயதினை மறைத்துஇதயத்தை இணைத்துவிட்டது.

இவ்வாறு கூறுகிறார்மிலிந்த் சோமன்.

காதல் மலர்ந்த தருணம்

நான்அங்கிதாவை முதல்முறையாக பார்த்தது சென்னையில் உள்ள நைட்கிளப்பில் தான்! பார்த்த உடனே அங்கிதாவை பிடித்துப்போய் எனது செல்போன்எண்ணை கொடுத்தேன்.

வழக்கமாகநைட் கிளப் போகும் பழக்கம் இல்லாத அங்கிதா, அன்று அங்கு வந்தது எனக்காகத் தான் என நினைக்கிறேன். அவர்அங்கு வந்தது நல்லதாகிவிட்டது.

நான்நம்பர் கொடுத்த மறுநாளே அங்கிதா கால் செய்து பேசினார். அப்புறம் தினமும் பேச ஆரம்பித்தார். நான் பேச, அவள் பேச, அப்படியே பேசிப் பேசி நட்பாகி, பிறகு அது காதலானது!

4 வருடங்களாக காதலித்து வந்த நாங்கள்தற்போது, திருமண பந்தத்தில் இணைந்துள்ளோம்.

அங்கிதாவுக்கு26 வயது என்பதால், வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக குறை சொல்கிறார்கள்.

வயது பிரச்சினைஇல்லை. எங்கள் காதல் பற்றி மற்றவர்களுக்கு தெரியாது. உண்மையான காதல்தான் வாழ்க்கை. அது எங்களிடம் இருக்கிறது என தங்களை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.