கொச்சைப்படுத்திய உலகம்: உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த இளம்பெண்!

இந்த உலகில் கிண்டல்கள், அவச்சொற்கள் என்னதான் ஒருவரின் மனதை புண்படுத்தினாலும், அந்த கிண்டல்களே ஒரு சிலரது மனதில் தன்னம்பிக்கையைஏற்படுத்தி அவர்களை வாழ்வில் வெற்றி பெற வழிவகுக்கிறது.

நம்மை கேலி செய்கிறவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் அவர்களது மனதில் மேலோங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் விடாமுயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கிறது.

அதற்கு உதாரணம் தான் மெக்ஸிகோவை சேர்ந்த 24 வயதான LorenaBolanos.

பிறக்கும்போது உடலின் பாதி அளவில் மச்சத்துடன் பிறந்துள்ளார். சிறு குழந்தையாக இருக்கும்போது அது லோரினாவுக்கு பெரிதாக தெரியவில்லை.

ஆனால், பள்ளிநாட்கள் அவருக்கு நரகமாக இருந்துள்ளது. தினம் தினம் கேலிகளுக்கு ஆளாகியுள்ளார். இதனால் துவண்டு போயிருந்த இவரை, தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இது தட்டமை நோயாக இருக்குமோ என கேட்டுள்ளார்.

ஆனால், அது தட்டம்மை கிடையாது. மச்சங்கள் தான், இது பிறப்பிலேயே இருக்கும் விசித்திர நோய் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மற்றவர்களின் கிண்டலை இவரது மனம் தாங்கிகொள்ளவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தாயின் ஆறுதலால் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

பேஸ்புக்கில் இவரது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், அதனை கிண்டல் செய்வதற்காக ஒரு கூட்டம் அலை மோதும். இவரது உடலை கொச்சைப்படுத்தி கருத்துக்களை பதிவிடுவார்கள்.

அப்போதுதான் அவரது நண்பர் ஒருவர், விசித்திர உடல் அமைப்புகள் என்னும் தலைப்பில் புகைப்படம் பிடித்தல் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார். தன் தோழி Lorena Bolanos-ன் உடலின் மச்சங்களைதன் புகைப்பட திறமையால் மிகவும் அழகாகவே காட்டினார்.

நடுவர்கள் முதல் அனைவரும் இவரை பாராட்ட மகிழ்ச்சியில் மிதந்துள்ளார் Lorena Bolanos.

பிறரால் கேலி செய்யப்பட்ட மச்சங்களே தற்போது அவருக்கு புகழினை பெற்று தந்தது. இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய அவர், வாழ்வதற்கு விருப்பம் இன்றி வாழ்ந்து வந்த என்னை, தன் நம்பிக்கையுடன் வாழ உந்தியது இந்நிகழ்வுதான் என தெரிவித்துள்ளார்.