உங்க ராசியை வச்சு உங்க மனநிலையை எப்படி என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.
மேஷம்
நீங்கள் ஒரு போதும் மாறாத நபர்களை நினைத்து எரிச்சல் அடைவீர்கள். இதனால் அதிக மன அழுத்தத்திற்கு கூட உள்ளாகி விடுவீர்கள். இந்த வலி அவர்களால் தான் வந்தது என்று பிடித்து வைத்துக் கொண்டு மல்லுக்கு நிற்பீர்கள். எனவே இதையெல்லாம் விட்டு விட்டு உங்கள் காழ்ப்புணர்ச்சியை கழட்டி விட்டு மறப்பது நல்லது. இதுவே மன நிம்மதியை மனதில் தந்து செல்லும்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் தற்போதைய வாழ்க்கைக்கு பதிலாக கடந்த கால வாழ்க்கையை மட்டும் நினைத்து வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இதனால் இப்பொழுது என்ன நடக்குது என்ன செய்ய வேண்டும் என்பது புரியாமல் சிக்கித் தவிப்பார்கள். எப்பொழுதும் யாரையோ இழந்து விட்டோம் என்பதாகவே நினைத்து வாடுவார்கள்.எனவே இதெல்லாம் விடுத்து நிகழ்காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்தாலே போதும் உங்கள் சோகம் பறந்து போகும்.
மிதுனம்
உங்கள் எரிச்சல் உங்களையே உயிரோடு சாப்பிட்டு கொண்டு இருக்கிறது. ஏதாவது பயங்கரமாக நடந்து விடுமோ என்று நடுங்கிக் கொண்டு இருப்பீர்கள். மகிழ்ச்சி எப்பொழுதும் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால் உங்களால் சுயமாக சந்தோஷமாக இருக்க முடியாது. எதிர்கால சிந்தனைகளை கொண்டே நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.
கடகம்
இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் மேல் கவனத்தை செலுத்தி விட்டு தங்கள் மேல் கவனத்தை செலுத்தாமல் இருப்பார்கள். பல நேரங்களில் தங்களுக்கு தேவையானதை கூட அலட்சியம் செய்து விட்டு தங்கள் அன்புக்குரியவர்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். முதலில் உங்கள் மேல் அக்கறை எடுத்து செயல்படுவது நல்லது. முதலில் உங்கள் நலன் பிறகு மற்றவர்கள் நலன் என்று செயல்பட்டால் நன்மை கிட்டும்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் தங்களால் தான் எல்லா தவறும் நடக்கிறது என்று நம்புவார்கள். நீங்கள் சூழ்நிலையை கட்டுப்பாட்டில் வைத்து பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைக்கு முடிவு காணுதல் தவறாக போய் முடியுமோ என்ற அச்சத்தில் இது தான் விதி என்று உங்கள் மீதே ஒட்டுமொத்த பழியை சுமத்தி கொள்ளுகிறீர்கள். ஆனால் அது உண்மையல்ல. மற்றவர்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை பார்த்து நீங்கள் எழுந்திருக்க முயலுங்கள்.
கன்னி
நீங்கள் ஒரு அநியாயமான நிலையை பிடித்து கொண்டு இருப்பீர்கள். எதைச் செய்தாலும் அதற்கு ஒரு வரைமுறை வைத்து கொண்டு போதும் என்று நினைப்பீர்கள். அதே நேரத்தில் கடினமாக உழைப்பதாக நீங்களாகவே நினைத்து கொள்வீர்கள். எனவே இதையெல்லாம் விட்டு விட்டு உண்மையாகவே வரைமுறை இல்லாமல் உங்கள் கடின உழைப்பை காட்டினால் மற்றவர்களின் பாராட்டை பெறலாம்.
துலாம்
உங்கள் பயணம் ஒரு அந்நியர்களின் பயணம் போல் இருக்கும். மற்றவர்களின் வெற்றிப் பாதையை கணக்கிட்டு அதே போல் உங்கள் வெற்றியை சீக்கிரம் காண முயல்வீர்கள்.ஆனால் அவர்கள் வெவ்வேறு பாதையில் பயணிப்பதை மறந்து விடுவீர்கள். அமைதியாக யோசியுங்கள் மற்றவர்களின் வெற்றியை பற்றி யோசித்து யோசித்து விட்ட உங்கள் நேரங்களை எப்பொழுது பிடிக்க போகிறீர்கள். எழுந்து ஓடுங்கள் உங்கள் வெற்றியை நோக்கி மட்டும்.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் எல்லாத்தையும் ஒரே நேரத்தில் மண்டைக்குள் போட்டு குழப்புபவர்கள். இது தான் அவர்களின் சோகத்திற்கு முக்கிய காரணம். நீங்கள் ஓரே நேரத்தில் பல வேலைகளை செய்வது தான் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறீர்கள். எனவே ஒரே நேரத்தில் ஒரு வேலையை கையில் எடுங்கள்.
நீங்கள் ஒரு சாதாரண மனிதன் என்பதை மட்டும் மனதில் திட்டவட்டமாக வைத்து கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயத்தை எடுத்து கையாளுங்கள். இப்படி இருந்தால் குழப்பம் இல்லாமல் சந்தோஷம் கையில் தங்கும்.
தனுசு
உங்கள் வாழ்க்கையில் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதே உங்களுக்கு தெரியாது. விடை காண முடியாத ஆயிரம் கேள்விகளை கையில் வைத்து கொண்டு சுத்தி கொண்டு இருப்பீர்கள். எனவே இதை விட்டு விட்டு முன்னெடுத்து செல்லுங்கள். முடிவை பற்றி யோசிக்காதீர்கள் வெற்றி படிக்கட்டில் ஏறிச் செல்லுங்கள் கண்டிப்பாக வெற்றி கிட்டும்.
மகரம்
நீங்கள் தனிமையை அதிகமாக நினைத்து கவலைப்படுபவர்கள். கடந்த காலத்தில் இருந்த நட்பு உறவுகளை நினைத்து தனிமையில் வாடுவீர்கள். எனவே இதை தவிர்த்து எல்லாரிடமும் அன்பாக பழகுங்கள், பயத்தை தவிர்த்து நட்புறவை மேம்படுத்துங்கள். இதனால் தனிமை அகலும், மகிழ்ச்சி பொங்கும்.
கும்பம்
நீங்கள் வெளித்தோற்றத்தை அழகுபடுத்த மட்டுமே விரும்புவீர்கள். உங்கள் அந்தஸ்து பொருளாதாரம் பற்றி சமூகம் பெருமையாக பேச வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் சமூகத்தில் இது மட்டும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காது.எனவே சந்தோஷம் உங்களினுள் இருக்கிறது. அதை வெளிப்படுத்த முயலுங்கள். வாழ்வு வளமாகும்.
மீனம்
நீங்கள் அடிக்கடி உங்கள் பள்ளி நண்பர்களை எல்லாம் இழந்து தனியாக தவிப்பது போல் உணர்வீர்கள். ஆனால் இதிலிருந்து முதலில் வெளியே வர வேண்டும். சில உறவுகளை நினைத்து நிகழ்கால உறவுகளை இழந்து விடாதீர்கள். உறவுகளுடன் உறவாடி மகிழ்வாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வு சிறக்கும்.