விழுப்புரம் மாவட்டம் – சின்னசேலம், இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த இளம் இலங்கைப் பெண்ணை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, சந்தை புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இலங்கைப் பெண்ணே காணாமல் போயுள்ளார்.
இவர், கடந்த 3 மாதங்களாக, விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி காலை 9:30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் இதுவரை மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சின்னசேலம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.