மனைவியை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய கணவன்: சிக்கியது எப்படி?

இந்தியாவில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை கொன்று சடலத்தை வீட்டுக்குள் புதைத்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் லோகேஷ் சவுத்ரி (30). இவருக்கும் முனீஷ் (28) என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் லோகேஷ் குஜராத் மாநிலம் வடோதராவில் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார்.

லோகேஷுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் மனைவியை கொலை செய்துவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி தனது வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த முனீஷை தனது நண்பர் உதவியுடன் கொலை செய்த லோகேஷ் சடலத்தை வீட்டுக்குள்ளேயே புதைத்துள்ளார்.

பின்னர் காவல் நிலையத்துக்கு சென்ற லோகேஷ், தனது மனைவியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் லோகேஷ் நடத்தையில் சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அனைத்து உண்மைகளையும் ஒத்து கொண்டார்.

இதையடுத்து லோகேஷை கைது செய்த பொலிசார் அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.