சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகள் ஷிவா டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
11-வது ஐ.பி.எல் தொடர் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு களமிறங்கியுள்ளது. ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள சென்னை அணி, இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றில், ஒரு வீடியோவில் தோனி மகள் ஷிவா பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார். மற்ற இரண்டு வீடியோக்களில் ஷிவா சென்னை அணிக்கு ஆதரவாக பேசியுள்ளார். தற்போது, இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதேபோல, சுரேஷ் ரைனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தோனி மகள் ஷிவா, ரைனா மகள் கிரேஸியா மற்றும் ஹர்பஜன் சிங் மகள் ஹினாயா ஆகிய மூன்று பேரும் ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ பாடலைப் பாடி விளையாடுகின்றனர். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இரண்டு நாள்களுக்கு முன்பாக சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைபடத்தை வெளியிட்டார். அந்தப் பதிவில், ” கிரேஸியாவும், ஷிவாவும் மிகவும் பிஸியாக இருக்கின்றனர். பெங்களூரு – சென்னை அணிகளுக்கிடையே நடந்த போட்டியின் ஹைலைட்டை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்போதே அவர்கள் டிஜிட்டல் உலகில் நுழைந்துவிட்டனர்” என்று பதிவிட்டிருந்தார்.