நீரிழிவை தவிர்க்க இதை செய்யுங்கள்!

தற்போது அனைவருக்கும் இருக்கும் நோய்களில் ஒன்று தான் நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் சுரப்பில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மையினால் நீரிழிவு ஏற்படுகிறது. நமது உடலில் அதிகமாக இன்சுலின் சுரப்பதால் தேவையற்ற நோய்களும் வருகிறது. அளவுக்கு குறைவாக இருந்தாலும் உடலில் பல பிரச்சனைகளும் வருகின்றன. இத்தகைய பிரச்சனையை போக்க நிறைய மருந்துகள் வந்துள்ளன.

இருப்பினும் நாம் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டோடு இருக்கவும் வேண்டும். மேலும் இந்த நீரிழிவு நோயைத் தவிர்க்க நமது வெயிட்டை மெயின்டெய்ன் பண்ணணும்.

இதுக்கு சில ஐடியாஸ் இருக்கு, என்னவென்று பார்ப்போமா.. தினமும் உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த சுழற்சி நன்றாக இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளையும் கரைத்துவிடும்.

இதனால் உடலானது பெருத்துவிடாமல் கட்டுப்பாட்டோடு இருக்கும். இதனால் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு வருவதைத் தடுக்கலாம். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் பெருமளவில் நீரிழிவு நோய் வரும். ஆகவே அவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு சில கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுப் பொருட்களான மீன், தானியங்கள், ஆலிவ் ஆயில் போன்றவற்றை சாப்பிட்டால் நீரிழிவு நோயைத் தடுக்கலாம்.

செடிகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களான காய்கறிகள், பீன்ஸ், பழங்கள் மற்றும் தானியங்களை உண்பதால் நீரிழிவு நோயைத் தடுப்பதுடன், உடலில் உள்ள கலோரியின் அளவையும் கட்டுப்படுத்தும்.

தவறாமல் நீரிழிவு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதனால் நாம் நமது உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மது அருந்துவதாலும், புகை பிடிப்பதாலும் உடலில் உள்ள நீரிழிவின் அளவை அதிகரிக்கும். மற்ற உணவுப் பொருட்களை உண்பவர்களை விட புகைப்பிடிப்பதால் மட்டும் 50% நீரிழிவால் பாதிக்கப்படுவர். எனவே புகை பிடிப்பதை முற்றிலும் விட வேண்டும்.