நிர்மலாதேவி விவகாரம்! மாணவிகளை என்ன செய்ய திட்டமிட்டிருந்தார்?

கல்லுரி மாணவிகளுக்கு வலைவீசிய நிர்மலாதேவி, அந்தமானுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

மாணவிகளை தவறான வழியில் அழைத்து சென்ற விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லுரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பேசிய ஓடியோவில், அடுத்த வாரம் முக்கியமான அசைன்மெண்டுக்காக தேவைப்படுகிறது, உங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று வரலாம் என்பது போல் பேசியிருப்பார்.

இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது காமராஜர் பல்கலைகழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி வெளியூரில் சிறப்பு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடுகள் நடக்கும்.

இந்தாண்டும் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனுமதியுடன் அந்தமானில் சிறப்பு கருத்தரங்கம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டிருந்தது. அப்போது தான் நிர்மலாதேவி பல்கலைகழத்துக்கு வந்து சென்றார்.

எனவே அந்தமான் அழைத்து சென்று தவறாக பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் எனவும், நிர்மலா தேவி விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.