நடிகர் ஆர்யா திருமணம் செய்வதற்காக நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு உள்ளாகி கடும் விமர்சனங்களை பெற்றது.
ஆர்யா இறுதியில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். இதனால் ஆர்யா எந்த பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவரை பலரும் மேடையிலே விமர்சிக்கின்றனர்.
நேற்று சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகை வரலட்சுமி “ஆர்யாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று மேடையிலேயே காமெடியாக கூறினார்.
“ஆனால் அவர் உன்னை ரிஜெக்ட் செய்துவிடுவார்” என அங்கிருந்தவர்கள் வரலட்சுமியை கலாய்த்துவிட்டனர்.