தேனிலவுக்கு சென்றுவிட்டு ஊருக்கு விமானத்தில் புதுமணத் தம்பதி திரும்பி கொண்டிருந்த போது புதுப்பெண் திடீரென உயிரிழந்த நிலையில், விமான நிறுவனம் மீது நீதிமன்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கொரே ஓஸ்வெல். இவருக்கு பிரிட்டனி என்ற பெண்ணுடன் கடந்த 2016-ல் திருமணம் நடந்த நிலையில் இருவரும் தேனிலவுக்கு சென்றனர்.தேனிலவுக்கு சென்றுவிட்டு டெக்சாசுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது பிரிட்டனிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கழிவறைக்கு அவர் சென்ற நிலையில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவர் பிரிட்டனிக்கு முதலுதவி சிகிச்சை செய்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் மருத்துவர் கூறியுள்ளார்.ஆனால், இதை காதில் வாங்கி கொள்ளாத விமான ஊழியர்கள் விமானத்தை அவசரமாக தரையிறக்காத நிலையில் தொடர்ந்து செலுத்தியுள்ளனர்.பின்னர் விமான நிலையத்துக்கு விமானம் வந்த பின்னர் பிரிட்டனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இதையடுத்து குறித்த விமான நிறுவனம் மீது பிரிட்டனியின் கணவர் கொரேவும் அவர் குடும்பத்தாரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவர்கள் கூறுகையில், நாங்கள் நஷ்ட ஈடு பணத்துக்காக இவ்வழக்கை நடத்தவில்லை.எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சோகச் சம்பவத்துக்கு வருந்துகிறோம். எங்கள் பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம்.இது குறித்த புகாரை விசாரித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.