இந்தியாவில் காதலன் தற்கொலை செய்து கொண்ட ஐந்து நாள் கழித்து காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவரும் ஆல்கா (18) என்ற பள்ளி மாணவியும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.இதையடுத்து இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால், காதலர்களின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மனவேதனையடைந்த ஆகாஷ் ஐந்து நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆல்கா மிகுந்த கவலையில் இருந்துள்ளார்.இதையடுத்து நேற்று ஆல்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆல்காவின் சடலத்தை கைப்பற்றியதோடு, அருகிலிருந்த கடிதத்தையும் கைப்பற்றியுள்ளார்கள்.சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.