கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை பட்டதாரி பயிலுநர் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளிக்காத பட்டதாரிகளுக்கான மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு கடந்த 23.4.2018 மற்றும் 24.4.2018 ஆகிய திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இந் நேரமுகத்தேர்விற்கு சமூகமளிக்காத பட்டதாரிகளிற்கான நேர்முகத்தேர்வு 01.05.2018 ம் திகதி அதாவது நாளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்விற்கு சமூகமளிப்பதற்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம் என்பதால், இதுவரை சமூகமளிக்காத பட்டதாரிகள் நாளை 01.05.2018 மாவட்ட செயலகத்திற்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் தோற்றமுடியும் என, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.