தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் மற்றும் கொடிகாமம் வர்த்தக சங்கத்தினர் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பேருந்துகள் மூலம் மேதின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.