கொழும்பு தாமரைக் கோபுரத்தின் உச்சியில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கையில் வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.அதற்கமைய நேற்றைய தினம் ஆசியாவின் மிக உயரமான கட்டடமாக கருதப்படுகின்ற தாமரை கோபுரத்திற்கு முழுமையாக மின் விளக்கு பொருத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

முதல் முறையாக தாமரை கோபுரத்தின் உச்சிப்பகுதியில் மின் விளக்கு நேற்று ஒளிரப்பட்டுள்ளது.அழகான தோற்றத்தில் தாமரை கோபுரம் காணப்பட்டுள்ள நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவரினால் இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.