கூவி கூவி ஏலத்தில் விற்கப்படும் மணப்பெண்கள்: பேரம் பேசி வாங்கி செல்லும் ஆண்கள்

திருமணம் என்றால் வரதட்சணை கொடுத்து பெண்களை திருமணம் முடித்துவைப்பார்கள் என்றுதான் நாம் அறிந்திருப்போம்.

ஆனால், ஒரு சில இடங்களில் பெண்கள் தட்டுப்பாடல் விலை கொடுத்து மணப்பெண்கள் வாங்கப்படுகின்றனர். இன்னும் ஒரு சில இடங்களில் ஏலத்தில் பெண்கள் விற்கப்படுகின்றனர்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெண்கள தட்டுப்பாடு இருக்கிறது. இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 1000 ஆண்கள் இருந்தால், 800 பெண்கள் தான் இருக்கிறார்கள்.

இதனால், ஹாரியானா, மேற்குவங்க இளைஞர்கள் வெளிநாடுகளிலிருந்து விலைகொடுத்து மணப்பெண்களை வாங்குகின்றனர்.

அதுவும் அமெரிக்காவில் இருந்து கூட இந்தியாவுக்கு மணப்பெண்கள் வருகின்றனர். அதில் ஒரு சில அமெரிக்க பெண்கள் இந்திய வாழ்க்கை முறை ஒத்துக்கொள்ளாத காரணத்தால், இங்கிருந்து சென்றுவிடுகின்றனர். ஒரு சில பெண்கள் சந்தோஷமாக திருமண வாழ்க்கையை நடத்தி தங்கள் கணவர்களையும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.

வெளிநாடு மட்டுமின்றி அருகில் உள்ள உள்ள மாநிலத்தில் இருந்தும் பெண்களை விலை கொடுத்து வாங்குகின்றனர். Joginder Singh என்பவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, 20,000 கொடுத்து மணப்பெண்ணை விலைக்கு வாங்கியுள்ளார்.

ஹரியானாவில் பெண்கள் தட்டுப்பாட்டால் இப்படி நடக்கிறது என்றால், பல்கேரியாவில் பெண்களை விலைபேசி விற்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சந்தை ஒன்று செயல்படுகிறது.

இது பாரம்பரியமாக ரோமானிய இன மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது, Stara Zagora நகரில் ஒவ்வொரு வருடமும் இதற்காக ஒரு சந்தை அமைக்கப்பெறும்.

இதற்கு மணமகள் விற்பனை சந்தை என்று பெயர், இந்த சந்தையில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. மணமகளாக செல்கிறவர்கள் தங்களை அழகாக அலங்கரித்துக்கொள்வார்கள்.

பெற்றோர்களே, தங்களது பிள்ளைகளை மிகவும் அழகாக அழைத்து செல்வார்கள். அங்கு வருபவர்கள் சாப்பிடுவதற்காக கடைகள் அமைக்கப்பட்டிருக்கும், மேலும் இளம் வயதினர்களின் நடனங்கள் அரங்கேறும்.

இங்கு, வரும் ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், 5 நிமிடம் வரை பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படும்.

அதன்பின்னர் அந்த ஆணுக்கு அப்பெண்ணை பிடித்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படும். அந்த தொகை அதிகம் என்றால், பேரம் பேசி தொகையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு அப்பெண்ணை அழைத்து சென்றுவிடுவார்கள்.

ஒரு பெண்ணை பல ஆண்களுக்கு பிடித்துவிட்டால், அப்பெண் ஏலத்தில் விடப்படுவார், இங்கு, இளம்வயது பெண்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தினர் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் பொருளாதாரா பிரச்சனையில் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட குடும்பத்தினர் இதுபோன்ற மணமகள் சந்தை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.