கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இணையத்தில் ஒரு பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் எனும் 18 வயது மாடல் (இப்போது இவரது வயது 19). சின்ட்ரெல்லா எஸ்கார்ட் எனும் நிறுவனத்தின் மூலம் இவர் தனது கற்பை ஏலத்தில் விற்றார்.
சின்ட்ரெல்லா எஸ்கார்ட் என்ற இணைய நிறுவனம் ஜான் சாகோபியல்ஸ்கி என்பவரால் உருவாக்கப்பட்டது ஆகும். இங்கே டஜன் கணக்கில் கன்னிப் பெண்கள் (என்ற பெயரில்) தங்கள் கற்பை ஏலத்தில் விற்று வருகிறார்கள்.
இந்த நிறுவனத்திற்கு ஹாலிவுட் நடிகர்கள் பலர் கிளைண்டாக இருந்து வருகிறார்கள் என்று அறியப்படுகிறது. கற்பை ஏலத்தில் விற்கும் அந்த பரபரப்பு கிளம்பிய போது அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனுக்கு வயது 18.
பெற்றோரால் வெளியேற்றப்பட்ட இந்த பெண் தனக்கு பணத்தேவை இருப்பதாக காரணம் கூறி, தனது கற்பை இணையத்தில் விற்க போவதாக 1993ல் வெளியான ஆங்கிலப் படம் இன்டீசன்ட் பிரபோசல் போல ஒரு தகவலை வெளியிட்டார்.
அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனாவின் கற்பு ஒரு மில்லியன் டாலர்கள் அதாவது ஏழு இலட்சம் யூரோக்களுக்கு 2017 மார்ச் மாதம் ஏலம் விடப்பட்டது. சின்ட்ரெல்லா எஸ்கார்ட் நிறுவனம் தான் இந்த ஏலத்தை நடத்தியது.
இந்த ஏலத்தில் தான் ரோமானியன் பெண்ணாக அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனாவின் கற்பு 2.3 மில்லியன் யூரோக்களுக்கு ஏலம் போனது.
ஏறத்தாழ இந்த ஏலம் முடிந்து ஒரு வருட காலம் ஆகிவிட்ட இந்நிலையில் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் ஒரு திடுக்கிடும் தகவலை குற்றச்சாட்டாக முன் வைத்துள்ளார்.
அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் இந்த கற்பை ஏலம்விடும் நிகழ்வானது சின்ட்ரெல்லா எஸ்கார்ட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட நாடகம் எனவும்.
இதன் மூலம் பல இளம் பெண்களை செக்ஸ் தொழிலில் ஈடுபடவைக்க அவர்கள் முயன்று வருகிறார்கள் என்றும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.