என்னது இது, நமீதா இப்படி குண்டாகிவிட்டார்: மச்சான்ஸ் அதிர்ச்சி

சென்னை: திருமணத்திற்கு பிறகு நமீதா ரொம்பவே குண்டாகியுள்ளது மச்சான்ஸ்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா தன்னை மோசமாக காட்டிவிட்டார்களே என்று வருத்தப்பட்டார். இதனால் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு கூட வரவில்லை.
தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தபோது லைட்டா குண்டாக இருந்த நமீதா தற்போது ரொம்ப குண்டாகிவிட்டார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நமீதா என்ன இப்படி குண்டாகிவிட்டார் என்கிறார்கள்.
இவ்வளவு வெயிட் ஆகாதுமா, கொஞ்சம் குறைத்துவிடுங்கள் என்கிறார்கள் மச்சான்ஸ். குண்டாக இருந்தாலும் நமீதா அழகு தான் என்கிறார்கள் சில மச்சான்ஸ்.