ஆர்யாவிடமிருந்து பெண்கள் வாழ்க்கை காப்பற்றப்பட்டுள்ளது..

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் பங்கு கொண்டார்கள், அதில் இவர் ஒருவரை திருமணம் செய்துகொள்வார் என்று கூறி நிகழ்ச்சியை தொடங்கினார்கள். ஆனால் கடைசியில் அவர் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் மேடையில் தன்னால் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று அழுதுவிட்டார்.

பின் பல ரசிகர்களும், மக்களும் இவர் ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்து வந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இறுதியில் இருந்த மூன்று பெண்கள் கூட ஆர்யா திருமணம் செய்துகொள்ளாததால் வருத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஆர்யா தற்போது அவரது இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட்டார். அண்மையில் கூட பிரஸ் மீட் போன்ற விஷயங்களில் பங்கு கொண்டார்.

இது குறித்து பேசிய நடிகரும், ஆர்யாவின் நண்பருமான விஷால்: முன்பே கூறியது போல் பணம் வாங்காமல் செய்ததை, அவன் பணம் பெற்றுக்கொண்டு செய்திருக்கிறான். ஆர்யாவிடமிருந்து 16 பெண்கள் வாழ்க்கை காப்பற்றப்பட்டுள்ளது, அதுவே போதும் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார் விஷால்.