மேடையில் காதலை வெளிப்படுத்திய சூப்பர் ஸ்டார்!

கடந்த வாரம் கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாட்டு இளைஞர், யுவதிகள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்ற TSK மற்றும் அசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறிய அசார் அங்கிருந்த பெண்ணொருவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

கபாலி திரைப்படத்தில் வந்த மாஜ நதி எனும் பாடலை நடிகர் ரஜினியை போன்று பாடி, காதலை வெளிப்படுத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத இலங்கை பெண் வெட்கப்பட்டு நிற்க, அரங்கமே அதிர்ந்தது.