வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

யாழில் வட.மாகாண வேலையற்ற பட்டதாரிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்.ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.உளநலம் தொடர்பான கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த குறித்த மாணவர்கள் தமக்கான வேலைவாய்ப்பினை வழங்கக்கோரியே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமது எதிர்கால நலன் கருதி தமக்கான வேலைவாய்ப்பினை காலதாமதமின்றி வழங்கி வைக்குமாறும், உரியவர்களுக்கு பதவிகளை வழங்கவேண்டும், அவசரமான நேர்முகத் தேர்வுகள் அரசியல் நகர்வா?

எம்மைத் தற்கொலைக்குத் தூண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.