கொக்குவில் வாள்வெட்டுக்கும் சுவிஸ் கணவனின் முன்னாள் மனைவிக்கும் தொடர்பா?

கொக்குவில் பகுதியில் இன்று பிற்பகல் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியை மற்றும் அவரது தாய் மீது வாளால் வெட்டித் தாக்கல் நட்டத்தியது.

கொக்குவில் பகுதியில் இன்று பிற்பகல் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியை மற்றும் அவரது தாய் மீது வாளால் வெட்டித் தாக்கல் நட்டத்தியது.

“வாள்வெட்டுக் கும்பலின் இலக்கு தவறியுள்ளது. அவர்கள் தாக்க வந்த இலக்கு நடன ஆசிரியையின் சகோதரிதான்.

சம்பவம் நடைபெற்ற போது, ஆசிரியையின் சகோதரி வீட்டில் இருந்துள்ளார். எனினும் தாக்குதல் கும்பல் வீட்டுக்குள் புகுந்த போது, தன்னை சுதாகரித்துக்கொண்டு அறை ஒன்றில் ஒளிந்து கொண்டார்” என்பது விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

“இந்த தாக்குதலுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள எனது கணவரின் முதலாவது மனைவிதான் காரணம். அவர் சில தினங்களுக்கு முன்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமண முறிவு பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு அவர் அச்சுறுத்தினார்.

இதனால் அவருக்கு எதிராக நான் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன. எனினும் எனது கணவரின் வேண்டுகோளின் படி அந்த முறைப்பாட்டை மீளப் பெற்றுக்கொண்டேன்.

இந்த நிலையில்தான் சுவிஸில் உள்ள அந்தப் பெண் என்னை தாக்குவதற்கு கூலிக்கு நார்களை அமர்த்தி என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளார்” என்று பொலிஸ் வாக்குமூலத்தில் ஆசிரியை கூறினார்.

இந்த முரண்பாடுகளுக்கு அச்சுவேலியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் சுவிஸ் நாட்டில் உள்ள வயது கூடிய பெண் ஒருவரை சூழ்நிலை காரணமாக திருமணம் முடித்துள்ள அதே வேளை இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த போது கொக்குவிலில் உள்ள நடன ஆசிரியையின் தங்கை மீது காதல் கொண்டு சுவிஸ் நாட்டில் உள்ள தனது மனைவிக்கு தெரியாமல் மறு மணம் ஒன்றை செய்துள்ளார்.

இந்த விடயம் தற்போது முதலாவது மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து பிரச்சினை எழுந்து தற்போது வெட்டுச்சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.