மறைந்த சிரேஷ்ட திரைப்படக் கலைஞர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில், அரசாங்கம் நாளை துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விகரமசிங்க ஆகியோர் நாளை துக்க தினமாக பிரகடனப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மறைந்த திரைப்படக் கலைஞர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி கிரியைகள் முழு அரச மரியாதையுடன் நாளை இடம்பெறும் என அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.