கொழும்பு, பம்பலப்பிட்டிய தூய பீட்டர் கல்லூரியில் நடன பயிற்சியல் ஈடுபட்ட யுவதி ஒருவர் மேடையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
வெப்புவ, சிலாபம் வீதியில் வசிக்கும் 26 வயதான திலினி நிராஷா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நடன பயிற்சியின் பின்னர் அந்த குழுவினருடன் இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நடன பயிற்சிக்கு முன்னர் அந்த குழுவினரின் உணர்வுகளை அதிகரிப்பதற்காக பயிற்சியாளர் வழங்கிய செயற்பாடு பிழைத்தமையே அவர் உயிரிழக்க காரணமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாய்ந்து ஆடும் நடனத்தின் போது மேடையின் உயரமான இடத்தில் பாய்ந்தவர் எதிர்பாராமல் கீழே விழுந்துள்ளார். விழும் போது அவரை யாராலும் பிடிக்க முடியாமல் போயுள்ளது.
சமிக்ஞை வழங்குவதற்கு முன்னரே குறித்த யுவதி அவ்வாறு பாய்ந்தமையினால் அவரை பிடிக்க முடியாமல் போய்விட்டதாக பயிற்றுவிப்பாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
விழுந்தவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.