தமிழகத்தில் பள்ளி மாணவியை காதலித்தால் ஆசியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி தாயப்பர் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (33). திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர் அதே பள்ளியில் ஆசிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது அதே பள்ளியில் அவரிடம் பயின்ற மாணவி ஒருவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இது குறித்து பள்ளியில் முறையிட்டதால், பள்ளி நிர்வாகம் அவரை மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.
தற்போது அப்பெண் பள்ளி படிப்பை முடித்துவிட்டதால், அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
கல்லூரியில் படித்து வந்த நிலையிலும், அவர் மாணவியிடம் தொடர்ந்து பேசியதால், மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு ஊர் திருவிழாவை முன்னிட்டு சதீஷ் ஏரிக்கோடி என்ற ஊருக்கு வந்துள்ளார். அங்கு நண்பர்களுடன் இசை நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளார்.
பின்பு, இரவு 11 மணியளவில், ஏரிக்கரை சேவைச் சாலையில் தனியாக சென்றுகொண்டிருந்தபோது, பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்பு தங்களிடமிருந்த கத்தியால் சரமாரியாக சதீஷை குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரின் உடலை கைப்பற்றிய போலீஸார் திருப்பத்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சதீஷை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.