கேரளாவில் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விராஜ்- ஜித்துவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் குழந்தை இல்லாத காரணத்தால், இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது, இதனால் விராஜ் விவாகரத்து கோரியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று Changallur- இல் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் திட்டம் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வில் ஜித்து தனது தந்தையுடன் கலந்துகொண்டார்.
கலந்தாய்வு நடந்துகொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென உள்ளே நுழைந்த விராஜ், ஜித்துவின் உடலில் பெட்ரேல் ஊற்ற தீவைத்து எரித்துள்ளார்.
இதில், உடலில் தீப்பிடித்த ஜித்து கலந்தாய்வு அரங்கத்தில் அலறியடித்து ஓடியுள்ளார், இதனையடுத்து தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கலந்தாய்வில் இருந்த யாரும் எனது மகளை காப்பாற்ற முன்வரவில்லை என ஜித்துவின் தந்தை கண்ணீருடன் கூறியுள்ளார், தற்போது கணவர் விராஜை பொலிசார் கைது செய்துள்ளனர்.