இந்தியாவில், விமானங்களில் கைப்பேசி மற்றும் இணையதளத்தை பயன்படுத்த தொலைதொடர்பு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை விமானங்கள் பறக்கும் போது கைப்பேசி, இணையதளம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கைப்பேசி மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என தொலைதொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இதற்காக விதிமுறைகள் உருவாக்கப்படும் எனவும், இதுதொடர்பாக விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து கைப்பேசி மற்றும் இணைய சேவைகளை பயணிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இந்த சேவை இந்தியாவுக்குள் பயணம் செய்யும்போது மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு, பிற நாடுகள் அனுமதி அளிப்பதை பொருத்து, இந்த சேவைகளை பிற நாட்டு வான்வெளியில் விமானம் பறக்கும் போது பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச சேவைகளில் இந்திய வான்வெளியில் விமானம் பறக்கும் போது சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விதிகளின்படி, விமானம் புறப்படும் முன் பயணிகள் கைப்பேசியை சுவிச் ஆப் செய்து விட வேண்டும். விமானம் தரையிறங்கிய பின்னரே, கைப்பேசியை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.