அடர்த்தியா முடி வளர ரகசிய பொருட்கள் தெரியுமா?

தலைமுடிக்கு தொடர்ந்து கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்களை பயன்படுத்தி வருவதால், முடி வறட்சி, முடி உதிர்தல், அரிப்பு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க இயற்கை பொருட்கள் மட்டுமே மிகச்சிறந்த தீர்வாக அமையும்.

தேவையான பொருட்கள்
  • முட்டை – 1
  • விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை

முட்டை, விளக்கெண்ணெய் மற்றும் தேன் ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, முடியில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின் 1-2 மணிநேரம் வரை ஊற வைத்து, முடியை நன்றாக கழுவ வேண்டும், இம்முறையை வாரத்தில் ஒருமுறை செய்தாலே நல்ல பலனைக் காணலாம்.

நன்மைகள்
  • முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள விட்டமின் A, B, D, E முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
  • தேன் முடியை மிருதுவாக்கி, முடி வறட்சி, பொடுகு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • விளக்கெண்ணெய் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
குறிப்பு

மேற்கூறப்பட்டுள்ள முறையை பின்பற்றுவதோடு மட்டுமின்றி ஆரோக்கியமான உணவுகள், சத்தான சரிவிகித உணவுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.