கண் திருஷ்டியை போக்கும் எளிய வழிமுறைகள்!

இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவதுமான கண்பார்வை திருஷ்டி எனப்படும்.

தோஷம், திருஷ்டி நீங்க

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்.

ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து நடைபெறும் காலங்களில் கருப்பட்டி கலந்த சீரக பானகம் தயாரித்து, வீட்டிற்கு வந்தவர்களுக்கு கொடுத்தால் விஷப் பார்வை உள்ளவர்களின் திருஷ்டி தோஷம் விலகும்.

தோஷம் அதிகம் இருந்தால் இந்த பானத்தை, அருகிலுள்ள துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து சென்று, அங்கு உள்ள பக்தர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கும் கொடுக்க, திருஷ்டி விலகும்.