நூறு பனை மரங்கள் ஒரு காட்டினை போல பலமானது. பனை ஓலையின் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா?அதில் நுங்குகளை பதநீர் ஊற்றிப் பருகினால் அமிர்தம் தான்….. எத்தனை பேர் இவ்வாறு குடித்திருக்கின்றீர்கள்….. இல்லாவிட்டால் பரவாயில்லை…. இவர்களுடன் இணையுங்கள்……
பனைமரத்தின் வேர் மண்ணில் ஆழ ஊடுருவி நிலத்தடி நீரின் அளவினை தக்கவைத்துக்கொள்ளும் .வீட்டுக்கொரு குழாய்கிணறுகளையும் குளங்களில் வீடுகளை கட்டும் நாசமறுக்கும் நம்மவர்களுக்கு பனைமரங்களைப் போல நண்பர்கள் எவரும் இல்லை.
எதிர்வரும் 7 ஆம் திகதி மன்னாரில் நுங்குத் திருவிழா சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர்…