வடக்கு மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சாத்தியமுள்ளதென அரசாங்கத் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது.உத்தியோகபூர்வ நிர்வாகக் காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும், எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நிர்வாகக் காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை, இந்த வருட இறுதியில் நடாத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மேற்படி ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடாத்துமாறு, தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமையவே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.