ஆண் வேடம் அணிந்து திருமணம் செய்த மாயப்பெண்….

ஆண் வேடம் போட்ட பெண் இளம் யுவதியை மூன்று மாத காலம் காதலித்து திருமணம் முடித்த சம்பவம் தோப்பூர் – முன்னம்போடிவட்டை பிரதேசத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணிணை ஏமாற்றி ஆண் வேடமனிந்து குறித்த பெண்ணினை திருமணம் செய்த 24 வயதுடைய வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றுமொரு பெண் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை (26) மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தான் ஆண் என காட்டி அவரை காதலித்து அப்பெண்ணிண் குடும்பத்தின் அனுமதியுடன் பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (25) திருகோணமலையில் பதிவுத் திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தின் போது பெண் என்று மதிக்காத வகையில் ஆடைகளையும், தலையினையும் சீவி இப்பெண் காணப்பட்டுள்ளார்.

பதிவு திருமணத்திற்கு வேறொரு ஆண் ஒருவரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணம் செய்த இரவு ஆண் வேடமணிந்த பெண்ணிணை உண்மையான பெண் இச்சைக்கு அழைத்தபோது அவர் காரணம் ஒன்றைச் சொல்லி மறுத்துள்ளார்.

அதே வேலை இவரது நடத்தையில் சிறிது சந்தேகம் காணப்பட திருமணம் செய்த உண்மையான பெண் தனது உறவினரிடம் இவரது செயற்பாடு பெண் போன்று காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திருமணம் செய்த பெண்ணிண் குடும்ப பெண்கள் ஆண் வேடமணிந்த பெண்ணிணை தனி அறையில் வைத்து சோதனைக்குட்படுத்திய போது அவர் உண்மையில் பெண் என்பதும் ஆண் வேடமனிந்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்ற விடயமும் தெரியவர மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மாயப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு ஏமாற்றி திருமணம் செய்வதற்கு உதவியாக இருந்த திருகோணமலையைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணினையும், வவுனியா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையும் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆண் வேடம் அணிந்து திருமணம் செய்த மாயப்பெண் திருட்டுக் கோஸ்டிகளோடு தொடர்புகளை வைத்துள்ளாரா?

அல்லது இவர் ஆண் வேடம் அணிந்து திருமணம் செய்ததற்கான வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்தும் மூதூர் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.