காதலியுடன் தெருவோரம் வசிக்கும் ஜாக்கி சான் மகள்: உதவி கேட்டு உருக்கமான வீடியோ வெளியீடு

ஹாங்காங்: நடிகர் ஜாக்கி சானின் மகள் இருக்க இடம் இல்லாமல் சாலையோரம் படுத்து தூங்குவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜாக்கி சான் 1998ம் ஆண்டு மிஸ் ஆசியா அழகிப் பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார்.

அதன் காரணமாக எட்டா சோக் லாம்(18) என்ற மகள் பிறந்தார். தனது கள்ளத்தொடர்பை ஜாக்கி சான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். எட்டா தனது தாயுடன் வசித்து வந்தார்.

எட்டாவை காணவில்லை என்று அவரது தாய் எலைன் கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் எட்டா, தனது காதலியுடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

எட்டாவை காணவில்லை என்று அவரது தாய் எலைன் கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் எட்டா, தனது காதலியுடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுத்து உதவி செய்யுங்கள். அரசு நடத்தும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்றால் என்னையும், ஆன்டியையும் பிரித்துவிடுவார்கள்.

ஃபேஸ்புக் நண்பர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. நான் போன் செய்தால் யாருமே எடுப்பது இல்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார் எட்டா.

யாருமே உதவி செய்யாததால் தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். ஏனென்றால் இதற்கு மேல் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. உண்மையாக காதலிக்கும் இருவரை பிரிக்க பார்க்கிறார்கள். எதற்காக என்று புரியவில்லை என்று கூறியுள்ளார் எட்டா. எட்டாவும், ஆன்டியும் 15 மாதங்களாக காதலித்து வருகிறார்கள்.

எட்டா ஆசிரியையான ஆன்டி மீது காதல் வயப்பட்டு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இது குறித்து தாய் எலைன் கூறியதாவது, ஆன்டிக்கு 30 வயது ஆகிறது.

அவர் ஒரு ஆசிரியை. அவர் எப்படி ஒரு 18 வயது சிறுமியை இப்படி வீடியோ வெளியிடச் சொல்லலாம்?. இது தவறு. பணம் இல்லை என்றால் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும்.

அதை விட்டுவிட்டு எட்டாவின் தந்தையின் பெயரை இழுத்து பணம் கேட்கக் கூடாது. உலகம் முழுவதும் மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். பணத்திற்காக அடுத்தவர்களின் புகழை பயன்படுத்துவது இல்லை என்றார்.