காத்து வராததால் பறக்கும் விமானத்தின் கதவை திறந்த பயணி – பிறகு என்ன நடந்தது தெரியுமா?

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் கதவைத் திறந்த பயணிக்கு சீனாவில் 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷேன்ஜென் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது.

அப்போது ஜென் என்ற இளைஞர் விமானத்தின் அவசரகால கதவுகளை திறந்து வெளியேற முயற்சித்துள்ளார்.

இதனால், புறப்பட இருந்த விமானம் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து 3 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

விமானத்தினுள் காற்று வராததால் ஜன்னலைத் திறக்க நினைத்து அவசரகாலக் கதவுகளை திறந்துவிட்டதாகக் கூறியுள்ளார் ஜென்.

இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு 15 நாள் சிறை தண்டனையும் ரூ.75,000 (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்கப்பட்டது.