துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரின் மர்ம உறுப்பை வெட்டிய பெண்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை பெண் ஒருவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் வரிசையாக குழந்தைகள் பலாத்காரம் நடந்து வந்த நிலையில் பெண்ணொருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவரின் ஆணுறுப்பை வெட்டி இருக்கிறார். தானே நேரிடையாக போலீசில் சென்றி இந்த சம்பவம் பற்றி புகார் கூறி இருக்கிறார்.

சம்பந்தப்பட்ட பெண் தனியாக நள்ளிரவில் உறங்கி கொண்டு இருக்கும்போது அவரது உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.

தன்னை பாதுகாத்து கொள்வதற்காக சமையலறையில் உள்ள கத்தியை பயன்படுத்தி தன்னை வன்கொடுமை செய்ய வந்த நபரை கடுமையாக தாக்கி இருக்கிறார்.

இதனால் தடுமாறிய அந்த நபர் தப்பித்து ஓட முயற்சிக்கையில் அவரை இழுத்து மின் கம்பத்தில் கட்டிய அந்தப் பெண் பின் சரமாரியாக கத்தி கொண்டு அந்த நபரின் ஆணுறுப்பை வெட்டியிருக்கிறார்.

வலி தாங்காமல் கதறிய அந்த நபரை அப்படியே விட்டு விட்டு காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் தந்திருக்கிறார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் புகாரின் பேரில் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க போவதாக விகாஸ் திவாகர் எனும் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.