யாழ்.வடமராட்சிப் பிரதேசத்தில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இடிமுழக்கத்துடன் ஒரு மணி நேரமாக கடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மூன்று மாத காலமாக நிலவி வரும் கடும் வெப்பத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு இன்று பெய்த மழை சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளதாகவும் அதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
கடந்த ஓரிரு நாட்களாக கொழும்பு வானிலை அவதான நிலையம் வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மின்னல் தாக்கம் அதிகமாகக் காணப்படும் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன், தற்போது அக்கினி நாள் காலமாகவிருந்த போதிலும் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.