கிளிநொச்சி – பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தின் அதிபர் கடமை நேரத்தில்தாக்கப்பட்டமை கண்டித்து பாடசாலை மாணவா்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.தாக்குதல் மேற்கொண்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் மாணவர்கள்மற்றும் பெற்றோர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சிபரந்தன் இந்து மகாவித்தியாலயத்தின் அதிபர் மீது கடமை நேரத்தில் பாடசாலைஅலுவலகத்தில் வைத்து நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த அதேபாடசாலையில்கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவரின் கணவரே இவ்வாறு அதிபரைத்தாக்கியுள்ளதாக கிளிநொச்சிப்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தாக்குதலுக்குள்ளானஅதிபர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிபரை தாக்கிய நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.எனினும், குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையிலேயே, தாக்குதலுக்குள்ளான நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி மாணவர்களும்பெற்றோர்களும் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வலயக்கல்விபணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன்கலந்துரையாடியதையடுத்து பாடசாலை கற்றல் செயற்பாடுகள் வழமைக்குத்திரும்பியது.