தெற்கு ஒன்ராறியோ பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இருளில் தவித்தனர்.
ஹாமில்டன் பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த வயர்களை அப்புறப்படுத்த முயன்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார்.
ஹால்டன் பகுதியில் இருவர் மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று ஒரு மரம் அவர்கள் மீது சாய்ந்து, ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புயல் எச்சரிக்கை முடிவுக்கு வந்த போதும் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்னும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மின் வெட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் சில இடங்களில் விழுந்ததால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. மின் வயர்களில் போர்டுகள் விழுந்ததாலும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை பின்னர் சகஜ நிலையை அடைந்தது.
மின்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானவர்கள் இருளிலேயே பொழுதைக் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.