நீதிமன்றில் உறங்கிய நபருக்கு நேர்ந்த கதி!

மாவனல்ல மாவட்ட நீதிமன்றில் அண்மையில் வழக்கு விசாரணைகளுக்காக சென்றிருந்த நபர் தன்னை அறியாமல் உறங்கியதனால், தண்டனை அனுபவிக்க நேரிட்ட வினோத சமப்வமொன்று இடம்பெற்றுள்ளது.

காணி பிணக்கு தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்றிருந்த குறித்த நபர், தன்னை அறியாமல் உறங்கிய போது அவரது செல்லிடப்பேசி சத்தமாக ஒலித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் மலிந்த லியனகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகளுக்குச் சென்ற நபர் செல்லிடப்பேசியின் அழைப்பு மணியை ஒலியை நன்றாக குறைத்து வைத்துள்ளார்.

தன்னை அறியாமல் உறங்கியதனால் கையில் இருந்த செல்லிடப்பேசி கீழே விழுந்துள்ளது.

இதன் போது விழுந்த செல்லிடப் பேசியின் பாகங்களை ஒன்றிணைத்து சட்டை பையில் வைத்துள்ளார்.

செல்லிடப்பேசியின் அழைப்பு மணி ஒலியை குறைக்க மறந்ததனால், எவரோ ஒருவர் அழைப்பினை ஏற்படுத்திய போது நீதிமன்றில் சத்தத்துடன் செல்லிடப்பேசியின் அழைப்பு மணி ஒலித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், குறித்த நபர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.