அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவரின் மகத்தான பணி குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அமெரிக்க முழுவதும் உள்ள வைத்தியசாலை தரவரிசையில் இலங்கை வைத்தியர் இயக்குனராக பயணியாற்றும் வைத்தியசாலை முதல் இடத்தை பிடித்துள்ளது.
Health South Desert Canyon Rehabilitation என்ற வைத்தியசாலையே இவ்வாறு முதலிடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவில் இந்த வெற்றியை பெறுவதென்றால் வைத்தியசாலை ஒன்று பல்வேறு பிரிவுகளில் வெற்றியை பதிவு செய்திருக்க வேண்டும்.
நோயாளிகளின் திருப்தி அதன் முதல் அங்கமாகும். அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, வைத்தியர்களுடன் உள்ள தொடர்பு மற்றும் ஒப்புதல் திட்டம் தொடர்பில் தரப்படுத்தல் என்பன ஆய்வில் கண்காணிக்கப்பட்டுள்ளன.
ரொக் ஹில் ஹெல்த் சவுத் என்ற வைத்தியசாலையில் சேவையை பெற்றவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் சுகாதார பாதுகாப்பு இன்னும் ஒரு முக்கிய காரணமாகவே கருதப்படுகின்றது. இந்த வைத்தியசாலை நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற நிலையில், நோயாளிகளுக்கு உயர் மட்ட பாதுகாப்பு வழங்கி சாதாரண வாழ்க்கைக்கு செல்வதற்கான உறுதியை வழங்குகின்றது.
நோயாளிகள் குணமடைந்தவுடன் குடும்பத்துடன் தங்கள் வீடுகளுக்கு செல்ல வைப்பதே வைத்தியசாலையின் இறுதி நோக்கமாகும்.
இலங்கை வைத்தியர் மாலிகா ஜயசூரியவின் கண்கானிப்பு மற்றும் ஆலாசனைக்கு கீழ் இயங்கும் ரொக் ஹில் வைத்தியசாலைக்கு நோயாளிகளிடம் இருந்து சிறந்த பாராட்டு கிடைத்துள்ளது.
மாலிகா ஜயசூரிய பேராதனை வைத்திய பீடத்தில் உருவாகிய ஒரு வைத்தியராகும். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலையில் செயற்பட்டவர் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றார்.