முப்படைகளின் அணிவகுப்புடன் வருகை தரும் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் முடக்கப்பட்ட 8வது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் மீண்டும் நாளை மறுதினம் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

மே 8ம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்துவார்.

புதிய பாராளுமன்றம் ஆரம்பித்து வைக்கப்படும் போது ஜனாதிபதிக்கு 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை பாராளுமன்ற வீதியில் அளிக்கப்பட்டு, இது போன்ற சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகள் இடம்பெறும்.

பாராளுமன்றத்தில் பார்வையாளர் கலரி மூடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள், மற்றும் விசேட பிரமுகர்கள் மாத்திரம் இந்த ஆரம்ப நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆரம்ப தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்துவார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் 10ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.