லண்டனின் நகரிலுள்ள கியூ பகுதியில் உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகை (தாவரவியல் பூங்கா) உள்ளது. 1863 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த கண்ணாடி மாளிகை மிகவும் புகழ்பெற்றது. இதில் பல்வேறு வகையான தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வித்தியாசமான தாவரங்கள் இங்கு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. 2003 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இதனை அங்கீகரித்தது.
பல ஆண்டுகளாக பயன்பாட்டிலிருந்த இக்கண்ணாடி மாளிகை சற்று சேதமடைந்திருந்தமையின் காரணமாக சரி செய்வதற்காக கடந்த 5 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நிலையில், 41 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் செலவில் இதன் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் பல புதிய தாவரங்களின் தொகுப்புகளுடன் கண்ணாடி மாளிகை மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகம்.