அடுத்த மாதம் முதல் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

அடுத்த மாதம் முதல், பெறுமதி சேர் வரி முறைமையில் சில மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள், கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்காக செலுத்திய பெறுமதி சேர் வரியினை மீள பெற முடியும் என இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மேலதிக சுற்றுலா பயணிகளை கவரமுடியும் என மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது.